Normal
மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட கலெக்டர்
திருப்பத்தூர் அருகே மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென சென்று பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமையல் அறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கிய உணவில் குறைபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் உணவினை வழங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பள்ளி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் மாணவிகளுடன் மதிய உணவை சாப்பிட்டார். அப்போது திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story