கலெக்டரின் 3 வயது மகள் உலக சாதனை


கலெக்டரின் 3 வயது மகள் உலக சாதனை
x
தினத்தந்தி 13 Jun 2022 1:32 AM IST (Updated: 13 Jun 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கலெக்டரின் 3 வயது மகள் உலக சாதனை படைத்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி- தீபிகா தம்பதியரின் 3 வயது மகள் மீரா அரவிந்தா. இந்த சிறுமி நோபல் உலக சாதனை பதிவிற்காக 58 நடனமுத்திரைகள் மற்றும் நவரசபாவனங்களை 10 நிமிடங்களில் செய்து காட்டி சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பசுபதி மற்றும் நவீன்ராஜ் இருந்தனர்.


நேற்று கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுமி மீரா அரவிந்தாவின் குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார். சாதனை படைத்த மீராஅரவிந்தாவுக்கு நோபல் உலகசாதனைப்பதிவு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குனர் திலீபன் மற்றும் மாநில இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினர்.


Next Story