முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு


முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு தொிவித்தாா்.

கடலூர்

மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் சிலம்பம் விளையாட்டு போட்டியில் கல்லூரி மாணவ- மாணவிகள் பிரிவில் ஒற்றை கொம்பு வீச்சு பிரிவில் கே.மோகன் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இரட்டை கொம்பு வீச்சு பிரிவில் எஸ்.தமிழ் அஞ்சலை 3-வது இடம் பெற்றார்.

மேலும் நீச்சல் போட்டியில் பள்ளி மாணவர் பிரிவில் எ.அலோசிடியஸ் 100 மீட்டர் பட்டர்பிளையில் வெற்றி பெற்று, இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இதேபோல் கல்லூரி பெண்கள் பிரிவில் ஆர் ரக்க்ஷனா 200 மீட்டர் பிரஸ்டோக்கில் 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சாதனை படைத்து கடலூர் திரும்பிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, நீச்சல் பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story