பருத்தி ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்


பருத்தி ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்
x

அரூரில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு, கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்துக்கு கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள், பருத்தி அரவை மில் வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பருத்தியை நிழலில் நன்கு உலர்த்தியும் சருகு தூசி இல்லாமல் வெண்மை நிறத்துடன் எடுத்து வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம். ஏலத்தில் கிடைக்கும் பருத்திக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே பருத்தியை விற்பனைக்கு கொண்டு வரும் போது தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story