கலெக்டர் திடீர் ஆய்வு
குத்துக்கல்வலசை கிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
திருப்புல்லாணி யூனியன் களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசை கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு செய்தார். கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். அரசின் பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பித்து திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கிறதா, ரேஷன் கடைகளில் சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா, குடிநீர் கிடைக்கிறதா என பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story