'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கல்லூரி கனவு" என்ற நிகழ்ச்சியை இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார் .
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" என்ற நிகழ்ச்சியை இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
இந்த திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
பின்னர் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ;
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் சோர்வாக இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்ச்சி அளிக்கிறது.முதல் அமைச்சராக வரவில்லை, சொந்த பிள்ளைகளாக எண்ணி உங்களை வாழ்த்த வந்துள்ளேன்.என கூறினார் .