தாய்சேய் நல விடுதி வளாகத்தை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவிகள்
ராஜபாளையத்தில் தாய்சேய் நல விடுதி வளாகத்தை கல்லூரி மாணவிகள் தூய்மைப்படுத்தினர்.
ராஜபாளையம்.
ராஜபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் தாய் சேய் நல விடுதியில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.ராஜபாளையம் டி.பி.மில் சாலையில் அமைந்துள்ள அரசு தாய் சேய் நல விடுதியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் ஏ.கே.டி, தர்மராஜா பெண்கள் கல்லூரியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இப்பணியில் தாய் சேய் நல விடுதியை சுற்றியுள்ள முட்கள், குப்பைகள் களை செடிகள் அகற்றப்பட்டன.
முன்னதாக பணியை ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி துணை இயக்குனர் கலுசிவலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மேலும் கல்லூரி பேராசிரியை சுபத்ரா, ராஜலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் மாணவிகள் துப்புரவு பணியை மேற்கொண்டனர்.