ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை அரசு கல்லூரி மாணவிகள் முற்றுகை


ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை அரசு கல்லூரி மாணவிகள் முற்றுகை
x

ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை அரசு கல்லூரி மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை அரசு கல்லூரி மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அரசு கல்லூரி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி கடந்த 2019-2020-ம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது இங்கு பி.காம்., பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாட வகுப்புகளில் சுமார் 750 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போதிய இட வசதி இல்லை என்று கூறி ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளை நெல்லை காந்திநகரில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரியுடன் இணைந்து சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஆலங்குளம் அரசு கல்லூரி மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று ஆலங்குளம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலக வளாகத்தில் தரையில் மாணவிகள் அமர்ந்து இருந்தனர்.

அப்போது ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி ஆலங்குளத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அரசுக்கு கல்லூரி மாணவிகள் கோரிக்கை வைத்தனர். கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story