கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாணை 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவ முறையை பின்பற்ற வேண்டும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும். 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தப்படாமல் இருக்கும் மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story