மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி


தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி நடந்தது. பயிற்சியில் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த விளக்கப்பாடங்களும், செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டன. முக்கிய அலங்கார மீன்கள், அவற்றின் இனப்பெருக்கம், நீர்தரப் பராமரிப்பு, உயிர் உணவுகள், பொருளாதாரம் மற்றும் மத்திய, மாநில அளவிலான நிதியுதவித் திட்டங்கள், நோய்கள் மற்றும் குணப்படுத்தும் முறைகள, அலங்கார மீன்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் வழிகள் குறித்து விளக்கி கூறப்பட்டன. தூத்துக்குடி சக்கம்மாள்புரத்தில் உள்ள அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார். மீன்வளர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர்கள் சா.ஜுடித் பெட்ஸி, அனிக்ஸ் விவேக் சந்தியா ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.


Next Story