புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி


புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி
x

தளியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி

தளியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய கல்லூரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி தற்காலிகமாக கல்லூரி செயல்படும் தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (தளி), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறியதாவது:- இந்த கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை தமிழ், இளங்கலை வணிகவியியல், இளங்கலை கணினி அறிவியியல் போன்ற பாடபரிவுகள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். மலை கிராமங்களில் உள்ள மாணவர்களின் நலன் கருதியும், அவர்களுடைய உயர்கல்விக்கு இந்த கல்லூரி முத்தாய்பாக அமைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் ரூ.5 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 வகுப்பறைகள் ரூ.4 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.

4 கல்லூரிகள்

இதேபோன்று, பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28 வகுப்பறைகள் மற்றும் 4 ஆய்வகங்கள் ரூ.7 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த 4 கல்லூரிகளில் ரூ.19 கோடியே 30 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தையா, தளி ஒன்றிய குழுத்தலைவர் சீனிவாச ரெட்டி, தர்மபுரி மண்டல கல்லூரி இணை இயக்குனர் ரமாலட்சுமி, கலை கல்லூரி முதல்வர்கள் மணிமேகலை, ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், தாசில்தார்கள் கவாஸ்கர், குருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிகுமார், மாவட்ட இனளஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரகுமான் மாநில செயலாளர் அன்வர், மாநகராட்சி கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா மற்றும் துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story