சாதியை சொல்லி திட்டியதாக கல்லூரி பேராசிரியர் கைது
சாதியை சொல்லி திட்டியதாக கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேரலையூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47). இவர் திருச்சியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சோமரசம்பேட்டை இனியானூரை சேர்ந்த செல்வராஜ் (42). இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி கல்லூரி வளாகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனை செல்வராஜ் சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை கைது செய்தார்.
Related Tags :
Next Story