விவசாய கிணற்றில் கல்லூரி மாணவர் பிணம்


விவசாய கிணற்றில் கல்லூரி மாணவர் பிணம்
x

காரிமங்கலம் அருகே விவசாய கிணற்றில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே விவசாய கிணற்றில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சஞ்சய் (வயது 19). இவர் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது பெற்றோர் வெளியூர் சென்று இருந்தனர். இதனால் மாணவர் அங்கிருந்து வெளியே சென்று உள்ளார். பின்னர் பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது மகனை காணவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு இடங்களில் மகனை தேடினர். அப்போது வீட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ விவசாய கிணற்றின் மீது சஞ்சய் அணிந்து இருந்த ஒரு காலணி மட்டும் இருந்தது. இதை கண்டு பெற்றோர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கிணற்றில் பிணம்

இதுகுறித்து காரிமங்கலம் போலீசாரும், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 4 ராட்சத மின் மோட்டார்களை வைத்து கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி தேடினர்.

அப்போது மாணவர் கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர்கள் மாணவரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story