கல்லூரி மாணவி உள்பட 4 பெண்கள் மாயம்
மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்கள் மாயமானார்.
ஊத்தங்கரை அருகே உள்ள மொட்டன்குறிச்சி புதுப்பட்டியை சேர்ந்தவர் சசிகலா (வயது 48). கடந்த 19-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நந்தினி (19). தனியார் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி. கடந்த 20-ந் தேதி கல்லூரி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் இவாஞ்சலின் விஜிதா (35). ஆசிரியை. சம்பவத்தன்று இவர் ஓசூர் பஸ்தி பாரதியார் நகர் பகுதிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகலூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுமா (26). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.