சிதம்பரம் அருகேமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர் கைது


சிதம்பரம் அருகேமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சிலுவைபுரம் சிதம்பரம்-புவனகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவர் ¼ கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வரும் மேலவன்னியூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன்(வயது 22) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்திச் வந்தபோது, வாகன சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பூவரசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story