கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x

கடையநல்லூரில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூர் மலம்பாட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் மகாலட்சுமி என்ற மது. இவர் கடையநல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சரிவர படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும் தொடர்ச்சியாக செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story