விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஜெகவீரம்பட்டியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 50). இவருடைய மகள் அட்சயா ( 21). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு நேரில் சென்று படிக்காமல் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் பாடங்களில் தேர்ச்சி பெறாததால் சோகத்தில் இருந்தார். இந்தநிலையில் அவரது பெற்றோர் விவசாய பணிக்கு சென்று விட்டனர். தனியாக இருந்த அட்சயா, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அட்சயா இறந்தார். இந்த சம்பவம் பற்றி ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.