கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 47). இவரது மகன் நிதிஷ்குமார் (19). இவர் கரூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் நிதிஷ்குமார் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதில் மனவேதனையில் இருந்த நிதிஷ்குமார் திருக்காம்புலியூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story