கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை நேதாஜி நகரை சேர்ந்தவர் குமரன். இவர் திருச்சியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களது மகள் கமலி என்ற காயத்ரி(வயது 22). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.