கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

நொய்யல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கல்லூரி மாணவி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புதுகுறுக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமாரத்தினம். இவரது மகள் மிருந்தா (வயது 18). இவர் புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மிருந்தாவுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பிருந்தாவுக்கு அதிக அளவில் வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தாய் பாத்திமாரத்தினம் திருச்சி செல்வதாக மகள் மிருந்தாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு பணியை முடித்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மிருந்தா சேலையால் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த பாத்திமாரத்தினம் அக்கம், பக்கத்தினரை அழைத்து மிருந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மிருந்தாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்க அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story