கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமுல்லைவாயல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமுல்லைவாயல்,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு மெயின் ரோடு பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் அன்னம்மாள். இவருடைய கணவர் தர்மலிங்கம், 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ (வயது 21) என்ற மகளும், சந்தோஷ் (19) என்ற மகனும் உள்ளனர்.

ஜெயஸ்ரீ, ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சந்தோஷ் ஏ.சி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அன்னம்மாள் மற்றும் சந்தோஷ் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

தற்கொலை

வேலை முடிந்து இரவு இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் ஜெயஸ்ரீ கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயஸ்ரீ தன்னுடன் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே காதல் ேதால்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story