தீக்காயம் அடைந்த கல்லூரி மாணவி சாவு


தீக்காயம் அடைந்த கல்லூரி மாணவி சாவு
x

தீக்காயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகள் லாவண்யா (வயது 17), காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சம்பவத்தன்று வீட்டு வாசலில் விளக்கு ஏற்றிய போது திடீரென அவரது ஆடையில் தீப்பற்றியது.

இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிம்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story