குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி சாவு


குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி சாவு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டையில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

திருமக்கோட்டை தேரடி தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகள் அபிநயஸ்ரீ (வயது20). இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய தந்தை சசிகுமார் இறந்து விட்டதால் தனது பெரியப்பா பாஸ்கர் வீட்டில் வளர்ந்து வந்தார்.

குளத்தில் மூழ்கி சாவு

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அபநயஸ்ரீ தனது வீட்டின் பின்புறம் உள்ள திரி குளத்தில் இறங்கி கால், கைகளை கழுவி உள்ளார். அப்போது தடுமாறி குளத்தில் விழுந்த போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மூழ்கி இறந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் அபிநயஸ்ரீயை அவரை பல் தேடிய போது குளத்தில் மிதந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிநயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர்கள் சிவனேசன், ரவீந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story