களக்காடு பச்சையாறு அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
களக்காடு பச்சையாறு அணையில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்
களக்காடு
களக்காடு பச்சையாறு அணையில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர்
நெல்லை டவுன்- குற்றாலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் நம்பி கேசவன் (வயது 18). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் களக்காடு அருகே கருவேலங்குளத்தில் உள்ள தனது மாமா முத்தையா வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர், அங்கிருந்து களக்காடு பச்சையாறு அணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அணையில் மூழ்கி பலி
பச்சையாறு அணையில் நம்பி கேசவன் குளித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த நம்பி கேசவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.