தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி


தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி
x

சேலம் அருகே நடந்த விபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் பலியானார்.

சேலம்

சேலம் அருகே நடந்த விபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் பலியானார்.

மருத்துவக் கல்லூரி மாணவர்

கேரள மாநிலம் குருவாயூர் வடக்கு ரிங் ரோட்டை சேர்ந்தவர்கள் அனுப்-ரோஸ்மி தம்பதி. அனுப் குருவாயூர் அரசு ஆஸ்பத்திரியில் தோல் டாக்டராகவும், ரோஸ்மி பல் டாக்டராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது ஒரே மகன் தீபக் கோவிந்த் (வயது 23). இவர் சேலம் அருகே சின்னசீரகாபாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தீபக் கோவிந்த் வெளியே அறை எடுத்து தங்கி, கல்லூரிக்கு தினமும் சென்று வந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் நண்பரை பார்த்து விட்டு வருவதாக அறையில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு, காரில் சேலத்துக்கு வந்தார்.

பலி

பின்னர் நண்பரை பார்த்து விட்டு, நள்ளிரவில் அறைக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இவருடைய கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி தீபக் கோவிந்த் பரிதாபமாக இறந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீபக் கோவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story