ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் புதன்கிழமை ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
கழுகுமலை தெற்கு ரதவீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடைய மகன் பாலகணேஷ் (வயது 18). கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கழுகுமலையில் இருந்து பஸ்ஸில் வந்து இனாம் மணியாச்சி சந்திப்பில் இறங்கி, கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நடந்து செல்வது வழக்கம்.
புதன்கிழமை காலையில் பாலகணேஷ் கழுகுமலையில் இருந்து பஸ்சில் வந்து இனாம் மணியாச்சி சந்திப்பில் இறங்கி கல்லூரிக்கு தண்டவாள பகுதியை கடந்து சென்றார்.
ரெயிலில் அடிபட்டு பலி
அப்போது நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தூத்துக்குடி ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஏட்டு அருண்குமார், போலீசார் ஜேசுதாஸ், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாலகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த பாலகணேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து கதறி அழுதது அனைவர் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. விபத்து தொடர்பாக ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பாலகணேஷ் உடலை உறவினர்களிடம் ெரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.