நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூாி மாணவர் பலி


நாகர்கோவிலில்   மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூாி மாணவர் பலி
x

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நண்பரை பார்க்க சென்றவர்

நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கிளாட்சன் எட்வர்ட் சேம் (வயது 45). இவருடைய மகன் நிவேத் (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேத் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. திடீரென அங்கிருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிவேத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனை

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நிவேத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். இதனால், ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story