மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
கே.வி.குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
கே.வி.குப்பம் தாலுகா வேப்பங்கநேரி கிராமத்தை சேர்ந்த சி.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் கே.ஜெயபிரகாஷ் (வயது 19), குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.
இந்த நிலையல் இவர் கடந்த 14-ந் தேதி இரவு 8 மணி அளவில் வேப்பங்கநேரியில் இருந்து கே.வி.குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கெங்கையம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிரில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறகு ஜெயபிரகாஷ் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.