வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி


வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
x

பள்ளிகொண்டா அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

வேலூர்

பள்ளிகொண்டாவை அடுத்த தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவரது மகன் ஆகாஷ் என்கிற கவுதம் (வயது 22). குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இவர் குடியாத்தத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டைநோக்கி சென்று கொண்டிருந்தார். ஐதர்புரம் அருகில் உள்ள பாலாற்று மேம்பாலத்தின் மேல் சென்றபோது, எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story