கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயமானார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் மனிஷா(வயது 17). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறைக்காக இடங்கண்ணி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி முதல் மனிஷாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் மனிஷா கிடைக்காததால், இது குறித்து தா.பழூர் போலீசில் மணிமாறன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story