கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள பாலவிடுதி கோழிக்கார தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் கார்த்திகா (வயது 19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கார்த்திகா சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் பெற்றோர் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த கார்த்திகாவை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கார்த்திகாவின் தாய் இளவரசி கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கார்த்திகாவை தேடி வருகின்றனர்.


Next Story