அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கண்டக்டர் கைது


அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கண்டக்டர் கைது
x

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கண்டக்டர் கைது.

மதுரை,

மதுரை கூடல்நகர், சொக்கலிங்கநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42), இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் 17 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியின் அண்ணன், கண்டக்டரிடம் விசாரித்தபோது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை பாலமுருகன் சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த மாணவியின் அண்ணன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் பாலமுருகனை கைது செய்தனர்.


Next Story