கல்லூரி மாணவர் தற்கொலை
மதுரையில் செல்போன் பார்த்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
மதுரை மாவட்டம் களிமங்கலம் ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராணி (வயது 40), மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் வினோத்குமார் (19), தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கண்ட அவரது தாய் படிக்காமல் செல்போன் பார்த்து வருவதை கண்டித்துள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த வினோத்குமார் அரளிவிதையை அரைத்து தின்று கோரிப்பாளையம் பகுதியில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினோத்குமார் பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story