கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி பழைய காலனியை சேர்ந்தவர் சசிவர்ணன். இவரது மகள் காவியா (வயது 18). இவர் தாந்தோணிமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காவியா சம்பவத்தன்று தனது வீட்டில் விஷம் தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story