கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலைப்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் னம்உடைந்த அவர் வீட்டில் இருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

இதை கண்ட குடும்பத்தினர் அபிராமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story