கல்லூரி மாணவ-மாணவிகள் 20 கிலோ மீட்டர் தூரம் ஜோதி ஓட்டம்


கல்லூரி மாணவ-மாணவிகள் 20 கிலோ மீட்டர் தூரம் ஜோதி ஓட்டம்
x

உசிலம்பட்டியில் வனஉயிர்களை பாதுகாக்க கோரி கல்லூரி மாணவ-மாணவிகளின் 20 கிலோ மீட்டர் தூரம் ஜோதி ஓட்டம் நடந்தது.

மதுரை

உசிலம்பட்டி,

வன உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரின பாதுகாப்பு வார விழா தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வன உயிரின பாதுகாப்பு வாரத்தின் 2-ம் நாளான நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள இயற்கை வள பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வன உயிர்களை பாதுகாக்க வலியுறுத்தி செக்கானூரணியிலிருந்து உசிலம்பட்டி வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஜோதி ஓட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஜோதி ஓட்டத்தை உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இயற்கை வள பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் இந்த ஜோதி ஓட்டத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Related Tags :
Next Story