திருச்செந்தூரில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூரில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் 'ஆரோக்கியமான இந்தியா' என்ற தலைப்பில் கல்லூரி தரைப்படை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக லெப்டினட் சிவமுருகன் பேரணியின் அவசியம் குறித்து பேசினார்.
இப்பேரணி அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கி நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து ரெயில் நிலையம் சென்றடைந்தது. இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தரைப்படை மாணவர்கள் 70 பேர் கலந்து கொண்டனர். பேரணியில், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்காக உடற் தகுதி தேவை, போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும், தலைக் கவசம் அணி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு மாணவர்கள் சென்றனர். அதேபோல், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான இந்தியா குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை 29 தனி கம்பெனி தூத்துக்குடி ஆபிசர் கமென்டிங் லெப்டினட் சுனில் உத்தம் உத்தரவின் பேரில் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி ஆகியோரின் ஆலோசனைப்படி தரைப்படை அதிகாரிகள் லெப்டினட் சிவமுருகன், லெப்டினட் மணி, சுபைதார்கள் பிரகாஷ், ரவி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் மோகன் காந்தி மற்றும் ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.