கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவிகள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவிகள் முற்றுகை
x

தென்காசி கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவிகள் முற்றுகையிட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் போதிய இடவசதி இல்லாததால் இங்கு படிக்கும் மாணவிகளை நெல்லை மாவட்டத்தில் உள்ள ராணி அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்று படிக்குமாறு கல்லூரி முதல்வர் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கு சென்று வரும்போது காலதாமதம் மற்றும் படிக்க நேரமின்மை, உடல் சோர்வு, மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவதாக கூறி ஆலங்குளத்திலேயே படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு இந்த மாணவிகள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து சென்றனர். கல்லூரி மாணவிகள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story