கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் தர்ணா


கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் தர்ணா
x

விடுதியில் உணவு தரமில்லை என புகார்: கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் தர்ணா.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதிகம் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் விடுதியை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் நேற்று காலை கையில் சாப்பாடு தட்டுடனும், காலை உணவாக பரிமாறப்பட்ட சாதத்துடன், அண்டாவை தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வந்து தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விடுதியில் உணவு தரத்துடன் போடுவதில்லை. மெனுவில் இருப்பது போன்று உணவு வினியோகிக்கப்படுவதில்லை. உணவு தொடர்ந்து தரமில்லாமல் வினியோகிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து தரமாக உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story