கல்லூரி மாணவிகள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு


கல்லூரி மாணவிகள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு
x

மதுரையில் கல்லூரி மாணவிகள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கல்வி செல்வம் பெருகிட வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ராஜகோபால், கல்லூரி செயலாளர் விஜயராகவன், துணைத்தலைவர் ஜெயராம், பொருளாளர் ஆழ்வார் சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் வெங்கடேஸ்வரன், சுயநிதிபிரிவு இயக்குனர் பிரபு, அறக்கட்டளைதாரர் மகாலட்சுமி தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கணிதத்துறை உதவி பேராசிரியை பவானி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுரை கூடலழகர் கோவில் உதவி ஆணையர் செல்வி கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பூஜை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியையொட்டி புத்தாடை அணிந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகள், அலுவலர்கள் கல்விச் செல்வம் பெருக வேண்டி 1,008 திருவிளக்குகள் ஏற்றி வழிபட்டனர். விளக்கின் ஒளிவெள்ளம் கல்லூரியை பிரகாசிக்க வைத்தது. நிகழ்ச்சியில் முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியை பரிமளா நன்றி கூறினார்.


Next Story