நகர்மன்ற தலைவருக்கு கல்லூரி மாணவிகள் பாராட்டு


நகர்மன்ற தலைவருக்கு கல்லூரி மாணவிகள் பாராட்டு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் நகர்மன்ற தலைவருக்கு கல்லூரி மாணவிகள் பாராட்டு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட நாகை சாலையில் பல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கி வந்த மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதனை அகற்றுவதற்கு ஆவன செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமனுக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த மதுபான கடையை அகற்ற முயற்சி மேற்கொண்ட வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி மற்றும் 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உமா புகழேந்தியை, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் குமரேச மூர்த்தி, கல்லூரி பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story