கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்
கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்
விருதுநகர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மாலை நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் பின்பு கூடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் அவர்கள் திரண்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது காதல் விவகாரத்தில் இந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவர்களை விரட்டி அடித்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களது பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீரென மோதிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story