ெபாங்கல் வைத்த கல்லூரி மாணவிகள்


ெபாங்கல் வைத்த கல்லூரி மாணவிகள்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:17:30+05:30)

முதுகுளத்தூர் சோனை மீனால் பெண்கள் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் சோனை மீனால் பெண்கள் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாணவிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள் கொத்து படைத்து கதிரவனை வழிபட்டனர். விழாவில் மாணவிகளின் பாரம்பரிய நடனம், கும்மி, கோலப்போட்டி, உறியடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு வகையான பாடப் பிரிவை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


Next Story