5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை


5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை
x

சென்னை ஐகோர்ட்டில் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியத்தின் பரிந்துரையை ஆய்வு செய்யும் சட்டவாரியம், அதற்கு அனுமதி அளித்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு வழங்கும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள். கொலிஜியம் பரிந்துரை காரணமாக, சென்னை ஐகோர்ட்டுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story