மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சுரண்டை அருகே உள்ள குலையனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சுரேஷ் (வயது 25). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவிலில் இருந்து குலையனேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இருமன்குளம் அருகே வந்தபோது வடக்கு புதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரபாகரன் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். காயமடைந்த பிரபாகரன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story