மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை-மகள் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை-மகள் படுகாயம்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை-மகள் படுகாயம்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகில் உள்ள கேரளபுரம், கிருஷ்ணன் கோவில்தெருவை சேர்ந்தர் சந்திரசேகரன் (வயது59). இவரது மகள் ஸ்ரீதேவி (22). நாகர்கோவிலில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தந்தை, மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தக்கலை பஸ் நிலையம் அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து தந்தை சந்திரசேகர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோழிப்போர்விளையை சேர்ந்த ரொனால்டு சிபின் (31) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story