மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 33). விவசாயியான இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையின் காரணமாக ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் - ஆண்டிமடம் ரோட்டில் அருளானந்தபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது ஆண்டிமடம்-வளந்தை கிராமம் புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு (39) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story