மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் ராஜ் (வயது 37). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு பூவாலை கிராமத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சி. முட்லுார் அருகே வந்து கொண்டிருந்த போது ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றோரு மோட்டார் சைக்கிளும், எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.