மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் டக்ளஸ் (வயது60), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் முளகுமூடு பகுதிக்கு சென்றார். அங்கு சாலைைய கடக்க முயன்ற போது திருவிதாங்கோடு, இலுப்பவிளையை சேர்ந்த டிரைவர் சிஜின் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதின. இதில் டக்ளஸ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிஜினுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் டக்ளஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த டக்ளசுக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.


Next Story