உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மோதி 2 பேரை பலிவாங்கிய வாகனம்
மோட்டார் சைக்கிளில் மோதி 2 பேரை பலிவாங்கிய வாகனத்தையும், அதன் டிரைவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
உசிலம்பட்டி,
மோட்டார் சைக்கிளில் மோதி 2 பேரை பலிவாங்கிய வாகனத்தையும், அதன் டிரைவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
2 பேர் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேர்வைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், வெள்ளைச்சாமி (வயது 30).
செட்டியபட்டியை சேர்ந்தவர் காசிமாயன் (48). இவர்கள் 2 பேரும் தொட்டப்பநாயக்கனூர் அருகே மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் 2 பேரும் மோட்டார் ைசக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய காசிமாயனை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேத்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் இறந்தார்.
தீவிரமாக தேடுகிறார்கள்
இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதி 2 பேர் இறப்புக்கு காரணமான வாகனம் எது, அது எங்கு சென்றது, அதன் டிரைவர் யார்? என போலீசார் விசாரித்து, தீவிரமாக தேடிவருகின்றனர்.